காரைதீவு கோட்டத்தில் பின்தங்கிய பிரதேசத்திலுள்ள காரைதீவு விக்னேஸ்வரா வித்யாலயத்தில் இம்முறை புலமைப் பரிசில் சித்தி பெற்ற ஒரே ஒரு மாணவனான மகேந்திரன் ரனுஸ்ரிகன் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
நீண்ட காலத்திற்கு பிறகு இடம் பெற்ற பெருவிழா விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் திருமதி தேவகௌசல்யா குலேந்திரன் தலைமையில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
சாதனையாளர்கள் பாராட்டு விழாவில் பிரதேச சபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ,கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தகுமார், கோட்டக் கல்வி பணிப்பாளர் ஜே. டேவிட் ,உதவி கல்வி பணிப்பாளர் வீ.ரி.சகாதேவராஜா, ஆசிரிய ஆலோசகர்களான மா.லக்குணம், த.சிவநாதன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.
முன்னதாக மாணவி ஜெயசிறில் லினோஜாவின் அழகான அரங்கேற்ற வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
விழாவில் ரனுஷ்ரிகன் மற்றும் சித்தி பெற்ற நான்கு மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள். பின் தங்கிய பிரதேசத்தில் உள்ள விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இம்முறை தரம் ஒன்றுக்கு வரலாற்றில் அதிகூடிய 26 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதி அதிபர் பொன்.பாலேந்திரா ஆசிரியை திருமதி எஸ்.குமுதன் ஆகியோர் நிகழ்ச்சியை நெறிப்படுத்தி தொகுத்தளித்தனர்.
0 comments :
Post a Comment