திருகோணமலையின் பெருமையையும், கோணேசர் பெருமானின் வரலாற்று மகிமையையும் சுட்டிக்காட்டும் முகமாக தமது சுழியோடும் திறமைகளை கொண்டு வெளிப்படுத்திய சிறார்கள்



ஹஸ்பர்-
திருகோணமலையின் பெருமையையும், கோணேசர் பெருமானின் வரலாற்று மகிமையையும் சுட்டிக்காட்டும் முகமாக தமது சுழியோடும் திறமைகளை கொண்டு வெளிப்படுத்திய சிறார்கள்.

திருக்கோணேச்சரம் கோவிலிற்கு கீழுள்ள ஆழ்கடல் பகுதியில் நேற்று( 19.) மூன்று சிறார்கள் சுழியோடி கடலுக்கடியில் உள்ள கோவிலின் சிலைகள், சிதைவுகளை கண்டறிந்தனர். அத்தோடு வழிபாட்டிலும் ஈடுபட்டனர். இதற்கு முன்னரும் பலர் இங்கு சுழியோடியமை குறிப்பிடத்தக்கது. இதனை Trinco Aid நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இச்சிறு வயதில் சரியான பயிற்சி மூலம் இச்செயற்பாட்டினை செய்தமை பெருமைக்குறியதும் பாராட்டக்கூடியதாகும்.

இது போன்ற செயற்பாடுகளை தொடர்ந்து செய்வதற்கு ஆதரவு என்றும் கிடைக்கப்பெறும். இன்னும் பலர் இம்முயற்சிகளுக்கு முன் வர வேண்டும் என்பதே நோக்கம்.

வெளிநாட்டு படையெடுப்புகளினால் பல வரலாற்று சின்னங்கள், கோவில்கள் அழிக்கப்ட்டன. அதில் திகோணமலை கோணேசர் கோவிலும் ஒன்றாகும். இராவணன் தொடக்கம் பல தமிழ் மன்னர்களின் ஆட்சியின் அடையாளமாக விளங்கிய இத்தளம் இக்கட்ட்டு பல சிலைகள் திருடப்பட்டு, கடலுக்கு அடியிலும் வீசப்பட்டது. அதன் சிதைவுகள் பல வரலாறுகள் கடந்தும ஆழ்கடலில் காணப்படுகிறது. அதனை வெளிக்கொணர்வதும், உலகரியச் செய்வதும், அதனை கண்டு களித்து, தரிசித்து வரவும் இந்த சுழியோடி செயல்பாடு பயனுள்ளதாக அமையும்.

கோணேசர் கோவிலின் கீழ்ப்பகுதி கடலின் அதிகூடிய ஆழம் கடல் மட்டத்திலிருந்து 12இல் இருந்து 15 மீட்டர் ஆகும். இவ் ஆழம் வரை இச்சிறுவர்கள் சுழியோடியமை குறிப்பிடதக்கது.

சுழியோடும் செயற்பாடு நீச்சல், சுழியோடி பயிற்றுவிப்பாளர் திரு.நந்தன விஜயலால் (Yana foundation - Swimming Academy), திரு.ஜெயசீலன் (சர்வதேச ஆழ்கடல் சுழியோடி பயிற்சியாளர் - Trinco Blue Water Sports) ஆகிய இருவரின் பாதுகாப்புடனும், உதவியில் நடாத்தப்பட்டது.

இச்சிறுவர்கள் (Yana foundation - Swimming Academy) இல் சிறந்த முறையில் நீச்சல், ஆழ்கடல் சுழியோடும் பயிற்சி பெற்றவர்கள். இவர்களை சரியாக வழிநடத்தி, சிறந்த பயிற்சிகளை வழங்கிய பயிற்றுவிப்பாளர் திரு.நந்தன விஜயலால் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :