கல்முனை வலயக்கல்விப் பணிமனையில் பணியாற்றிய இரண்டு கணிதபாட கல்வியியலாளர்ஙளுக்கு வலய கணிதபாட ஆசிரியர்கள் கௌரவம் அளித்துள்ளார்கள்.
கல்முனை வலயத்தில் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய சீனித்தம்பி இலங்கநாதன் மற்றும் கணித பாட ஆசிரிய ஆலோசகராக பணியாற்றிய திருநாவுக்கரசு கிருனிவாசன் ஆகியோருக்கே இந்த கௌரவம் ஆசிரியர்களால் வழங்கப்பட்டது.
இப் பணிநயப்பு கௌரவிப்பு விழா நேற்று முன்தினம்(21) காரைதீவு லேடிலங்கா மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம் எஸ். சஹதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி அந்த கௌரவத்தை வழங்கினார்.
கூடவே பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஜாபீர் வரணியா ஆகியோருள்ளிட்ட கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment