கிண்ணியா துறையடியைச் சேர்ந்த அப்துல் லெத்தீப் முகம்மது நவ்பீஸ் ஜேர்மனி நாட்டுக்கு இன்று (29) பயணமாகின்றார்.
யாழ்ப்பபாணம் போதனா வைத்திசாலையில் கதிர் வீச்சு சிகிச்சையாளராக கடமையாற்றி வரும் இவர், புற்று நோயிற்கு சிகிச்சையளிக்கும் கதிர் வீச்சு சிகிச்சை பயிற்சிக்காக ஜேர்மனியின் Munich மற்றும் Mannheim ஆகிய வைத்தியசாலைகளில் இரண்டு வாரங்கள் பயிற்சிகளை பெறவுள்ளார்.
இந்த பயிற்சிக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து இவர் உட்பட மூவரும் செல்கின்றனர்.
இவர் கிண்ணியா ஜீனியஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்து செயற் பட்டு வருவதோடு, அப்துல் லெத்தீப் மற்றும் சரா உம்மா தம்பதியரின் ஐந்தாவது புதல்வர் என்பது குறிப்பிடத் தக்கது.
0 comments :
Post a Comment