அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களிற்கான புனித நோன்பை முன்னிட்டு பேரிச்சம்பழம் வழங்கும் நிகழ்வு (28) சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.சுபைதீன் அவர்களின் ஒருங்கினைப்பின் கீழ் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன் கலந்து கொண்டதுடன், விசேட அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் கலந்து கொண்டார், மேலும் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஏ.ஹிப்பதுல் கரீம், சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் செயலாளர் ஏ.எல்.எம்.மன்சூர், சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் ஆதம்பாவா (ரஷாதி), ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந் நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எம்.பர்ஹான் அவர்களும், ஏனைய பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்களும், பள்ளிவாசல் தலைவர்கள், செயலாளர்கள், நிருவாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment