நிந்தவூர் இளைஞர் ஐக்கியநாடுகள் சபையின் வியன்னா மாநாட்டில் பங்கேற்பு.


லங்கை மற்றும் தெற்காசிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் ஆஸ்திரியா- வியன்னா சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்கேற்றார் நிந்தவூரைச் சேர்ந்த ஜெம்ஷித் ஹஸன்.

நிந்தவூர் 13ம் பிரிவு, பிரதான வீதியைச் சேர்ந்தவரும், இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின், கடற்கரை மற்றும் கடல்வள முகாமைத்துவ பீடத்தின் மாணவராக பயிலும் ஹஸன் குத்தூஸ் முஹம்மட் ஜெம்ஷித் ஹஸன் 2023ம் வருடத்திற்கான ஐக்கியநாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பிலான அமைப்பின் ( United Nation Office on Drug and Crime - UNODC) மூன்று நாட்கள் நடைபெற்ற (13.03.2023 - 16.03.2023) சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டார்.

இவ்வருடம் குறித்த இளைஞர் மாநாட்டில் சர்வதேச அளவில் 27 நாடுகள் பங்கேற்கத் தெரிவாகியிருந்தன. இம்மாநாட்டில் நமது இளைஞர் ஜெம்ஷித் ஹஸன் இலங்கை சார்பிலும், தெற்காசிய பிராந்தியத்தின் சார்பிலும் பலத்த பலப்பரீசைகளுக்கு மத்தியில், சமர்ப்பணங்கள் மூலமாகவும், நேர்முகங்கள் மூலமும் தமிழ் பேசும் ஒருவராய் இந்த மாநாட்டிற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி மாநாட்டில் கலந்துகொண்டதன் பெறுபேறாக எதிர்காலங்களில் நமது ஜெம்ஷித் ஹஸன் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுத்தல் அமைப்பின் ( UNODC) இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியாக செயல்படத் தெரிவாகியுள்ளமை நமக்குப் பெருமையாகும்.

இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகள் சார்பாக ஐக்கியநாடுகள் சபையின் இளைஞர் மாநாட்டில் எமது அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிரதேசத்தில் குரல் ஒலித்தமையானது வரலாற்றின் ஒரு மைல் கல்லுமாகும்.

முதல் தடவையாக எமது அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிரதேசத்தில் பிரநிதித்துவம் ஐக்கியநாடுகள் சபையின் இளைஞர் மாநாட்டில் இடம்பெற்றுள்ளமை எமது நிந்தவூர் செய்த பெரும் பேறாகும்.

நமது இளைஞர் ஜெம்ஷித் அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :