சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட அன்னமலை ஸ்ரீ சக்தி வித்யாலயத்தின் முப்பெரும் விழா வித்தியாலய அதிபர் பொன். பாரதிதாசன் தலைமையில் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இம் முப்பெரு விழாவிற்கு பிரதம அதிதியாக நாவிதன்வெளி கோட்டக் கல்விப் பணிப்பாளர் பி. பரமதயாளன் ,கௌரவ அதிதியாக உதவிக் கல்விப்பணிப்பாளர் வீ.ரி.சகாதேவராஜா, மற்றும் சிறப்பதிதிகளாக ஆரம்பக் கல்வி ஆசிரியஆலோசகர் எஸ். அற்புதராஜா, விழா அனுசரணையாளர் தெய்வநாயகம் சிவகுமார் ,பிரபல சமூக செயற்பாட்டாளர் சந்திரசேகரம் ராஜன், ஆலய தர்மகர்த்தாக்களான சுதா .சுரேந்திரன் , ரி.தனபாலசிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள் .
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற
ரி. பிரவிஷன்(150) எஸ். மகிஷா (148)ஆகியோர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்கள்.மேலும் முன்பள்ளியிலிருந்து வருகைதந்த தரம் ஒன்று மாணவர்களை வரவேற்ற அதேவேளை தரம் ஐந்தில் நூறு வீதசித்தி பெற்ற 10 மாணவர்களினதும் விடுகைவிழாவும் ஒருங்கே இடம் பெற்றது.
தரம் 5 புலமைப் பரிசில் ஆசிரியை திருமதி உதயலட்சுமி பொன்னாடை போர்த்தப்பட்டுப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
விடுகை பெற்றுச் செல்லும் மாணவர்கள் மற்றும் வருகைதந்த தரம் 1 மாணவர்களுக்கு விழா அனுசரணையாளர் கொடை வள்ளல் தெய்வநாயகம் சிவகுமார் பாடசாலை பைகள் உட்பட கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
சித்தி பெற்ற புலமையாளர்களான மகிஷா பிரவிசன் உள்ளிட்ட புலமையாளர்களின் கண்கவர் நடனம் பலரது பாராட்டையும் பெற்றது.
0 comments :
Post a Comment