தேசியமட்ட கராத்தே திறந்த போட்டியில் சாதனை படைத்த ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்களை கௌரவித்தலும் கராத்தே சீருடை அறிமுகமும் இன்று (10.03.2023) வெள்ளிக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
ஏ.எஸ்.டி.டோஜோ கராத்தே டு சோடோகான் அமைப்பினால் நாடளாவிய ரீதியில் உள்ள கராத்தே பயிற்சி மாணவர்களுக்கிடையில் குமிதே போட்டி (இருவர்களுக்கிடையிலானது) நடாத்திய போட்டியில் காத்தா போட்டி (தனிநபர்களுக்கானது) என்பன புத்தளம் - வெண்னப்பபுவ அல்பெட் பீரிஸ் விளையாட்டு அரங்கில் இடம் பெற்றது.
இதில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இருந்து தரம் 06 தொடக்கம் தரம் 12 வரையிலான மாணவர்கள் 16 பேர் கலந்து கொண்டு 27 பதக்கம்களை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதில் தங்கம் 09, வெள்ளி 10, வெண்கலம் 08 ஆகிய பதக்கம்களை வென்றுள்ள மாணவர்களை இன்று பாடசாலை நிருவாகம் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தது.
கல்லூரி முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கராத்தே பயிற்றுவிப்பாளர் ஏ.ஆர்.நவாஸ், ஓட்டமாவடி தேசிய பாடசாலை கராத்தே குழுவினர் ஆசிரியர் குழாம் என பலரும் கலந்து கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவித்தனர்.
0 comments :
Post a Comment