கல்முனை கல்வி வலய மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் தற்போதய அதிபர் எம்.ஜே. அப்துல் ஹஸீப் அவர்களின் ஓய்வினைத் தொடர்ந்து, அக்கல்லூரியின் அதிபராக செயற்படும் பொருட்டு
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டவலியு.ஜீ.திசாநாயக்க அவர்களால்,மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்ட மருதமுனை கமு/கமு/அல்- ஹம்ரா வித்தியாலய அதிபராக செயற்பட்ட ஐ.உபைதுல்லாஹ் அவர்களுக்கான நியமனக் கடிதத்தினை, கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் நேற்று காலை வலயக்கல்வி அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பாடசாலை அதிபரிடமிருந்து ஐ.உபைதுல்லாஹ் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம், வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment