கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கல்முனை லெஜன்ட் அணி வெற்றி!



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் தனது 36 ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக அமரத்துவமடைந்த சீனித்தம்பி பேரின்பம் ஞாபகார்த்த T10 கிரிக்கெட் கடினப்பந்து இறுதிச்சுற்று போட்டி போட்டியும் கல்வி சாதனையாளர்கள் பாராட்டு விழாவும் நேற்றுமுன்தினம் (20) விபுலானந்தா மைதானத்தில் கழகத் தலைவர் ச. நேசராசா தலைமையில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் முதன்மை அதிதிகளாக கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளரும் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளருமான எந்திரி
என். சிவலிங்கம் கௌரவ அதிதியாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர்
கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கல்வி சாதனையாளர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இறுதிச்சுற்று போட்டியிலே சாய்ந்தமருது பிளைங் கோஸஸ் விளையாட்டு கழகத்தினை எதிர்த்து கல்முனை லெஜெண்ட் விளையாட்டு கழகம் மோதி இருந்தனர்.
இறுதிப் போட்டியில் கல்முனை லெஜென்ட் விளையாட்டுக்கழகம் சம்பியன் பட்டத்தினை தனதாக்கிக் கொண்டது வெற்றி பெற்ற கல்முனை லெஜெண்ட் விளையாட்டு கழகத்திற்கு ரூபாய் 30,000 மற்றும் பெறுமதி மிக்க வெற்றி கிண்ணமும் மற்றும் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்ற சாய்ந்தமருது பிளைங் கோஸஸ் விளையாட்டு கழகத்திற்கு ரூபாய் 20,000 மற்றும் பெறுமதி மிக்க வெற்றி கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டன.
கழக செயலாளர் கே. உமாரமணன் நன்றி உரையாற்றினார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :