2022/23 பெரும்போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக அரிசி வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வானது நேற்று பொத்துவில் 2ம் பிரிவில் பொத்துவில் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.
சமய அனுஷ்டானத்துடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பிரதேச செயலாளரின் உரையினைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 20 கிலோ அரிசி பக்கற்றுக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். சுபைர், நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஐ.எல். சுபைர், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஜீ.எம் அர்சாத், சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.எல்.றபீக், பொத்துவில் 2ம் பிரிவிற்கு பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சல்மா, கிராம உத்தியோகத்தர் திருமதி. காமிலா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ஜெசீலா, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் அனஸ், கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் றபீக், ஏனைய பிரிவுகளைச் சேர்நத சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கே.பி.எம். அரிசி ஆலை உரிமையாளர் அப்துல் அஸீஸ் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் அரிசி விநியோகமானது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இரண்டு கட்டங்களாக வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொத்துவில் பிரதேசத்தில் உள்ள 27 கிராம பிரிவுகளைச் சேர்ந்த 9141 குறைந்த வருமானமுடைய குடும்பங்கள் இதில் நன்மையடையவுள்ளன. அவர்களுக்கான அரிசி விநியோகமானது எதிர்வரும் நாட்களில் தத்தம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காரியாலயங்களில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment