ஜனாதிபதியின் கருத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கிணங்க சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் சம்மாந்துறை தக்கியா பள்ளிவாசலில் சம்மாந்துறை 1,2,4 ஆகிய பிரிவுகளுக்கான உணவு வங்கி அங்குரார்பண நிகழ்வு சம்மாந்துறை தக்கியா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களும் தக்கியா பள்ளிவாசல் சார்பாக அதன் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.எம். சஹீட், உபதலைவர் பொறியியலாளர் நவாஸ், செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கிதிர் முகம்மட், பொருளாளர் சட்டமுதுமாணி எம்.ஏ.எம்.லாபீர் நிர்வாக உறுப்பினர்கள் அஸீஸ், சலிம் அவர்களும் தக்கியா பள்ளிவாசல் இமாம் எம்.ஏ.அஜ்வத் ஹுசைன், தொழிலதிபர் இசட்.ஏ. பசீர் மற்றும் அல்ஹாபீஸ் ஹனீபா அவர்களும் சம்மாந்துறை 1,2,4 ஆகிய பிரிவுகளுக்கான கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்களும், சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உணவு வங்கிகளுக்கான பொறுப்பு உத்தியோகத்தர்களான றஹீம், அஸ்மி அவர்களும் பயனாளிகளும் கலந்துகொண்டார்கள்.
0 comments :
Post a Comment