ஐ.என்.ஏ தாதியர் மருத்துவ கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா!


ஐ.என்.ஏ தாதியர் மருத்துவ கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கல்லூரியின் ஸ்தாபகர் றிம்ஷா முளப்பர் தலையின் கீழ் பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் பிரதம விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி கௌவர மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டார்.

இங்கு மைத்திரிபால சிறிசேன அவர்கள் உரையாற்றுகையில்.

INA மருத்துவ உயர்கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த கல்வி நிறுவனத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்களே கல்வி பயில்கின்றனர். இலங்கையின் தென் மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் வசதிகள் குறைவாகும். அந்த குறையை ஈடுசெய்ய இவ்வாறான கல்வி நிறுவனங்கள் அவசியமாகும்.

அத்துடன் இன்றைய நாட்டின் நெருக்கடிமிக்க சூழல் காரணமாக துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லுகின்றனர். இது கவலைக்குரிய விடயமாகும்.

INA கல்வி நிறுவனத்தில் அனைத்து துறைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இது மகிழ்ச்சியான தருணமாகும். நான் மேடையில் இருக்கும் போது அழகு கலை தொடர்பாகவும் பயிற்றுவிக்கப்படுகின்றமையை அறிந்தேன். புத்திஜீவிகளை உருவாக்க இவ்வாறான நிறுவனங்கள் அவசியமாகும்.

கல்வி மேம்பாட்டுக்கு தனியார் துறையின் பங்களிப்பு அவசியமாகும். அதனை நாம் ஊக்குவிக்க வேண்டும். கல்வி துறையில் அரச கல்வி நிறுவனங்கள் மாத்திரமே செயற்பட வேண்டும் என ஒருசிலர் கூறுகின்றனர். எனினும் அந்த கருத்துக்கு நான் ஒருபோதும் உடன்படமாட்டேன். தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டாயம் செயற்பட வேண்டும். மருத்துவ துறைசார் தனியார் கல்வி நிறுவனங்களில் காணப்படும் வசதிகள் போன்று வசதிகளுடன் கூடிய அரச மருத்துவ கல்வி நிறுவனங்கள் நாட்டில் இல்லாதமையிட்டு நான் கவலை அடைகிறேன்.

எனவே இந்த கல்வி நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். என தெரிவித்து இருந்தார்.

இப்பல்கலைக் கழகத்தில், தாதிய கற்கை நெறியுடன், உளவியல், குழந்தை உளவியல், மருத்தாளர் உதவியாளர் போன்ற கற்கை நெறிகளைக் கற்ற 80 மாணவர்கள் வெளியேறினர். இதில் உள்வாரியாகக் கற்ற 50 மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :