பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டும், மின்சாரம் எரிபொருள் எரிவாயு பொருட்களின் விலைகளை குறை, நியாயமற்ற வரிக் கொள்கையை உடனடியாக திருத்து, சம்பள முரண்பாட்டினை தீர்க்கும் குழுவின் அறிக்கையினை உடனடியாக நடைமுறைப்படுத்து, பல்கலைக்கழக விவகாரங்களில் கல்வி அமைச்சரின் மௌனம் ஏன், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது கைவைக்காதே, ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறையை உடனடியாக உருவாக்கு, பல்கலைக்கழக ஊழியர்களின் இல்லாமலாக்கப்பட்ட ஊதியத்தை உடனடியாக வழங்கு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக்கொள்கைகளுக்கு எதிரான கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பல்வேறு பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கள் இன்று (15) புதன்கிழமை முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளின் காரணமாக பல்வேறு அரச நிருவனங்களைப்போல் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் கல்வி உள்ளிட்ட நடவடிக்கைகள் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment