இறக்காமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையே ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றினை கட்டியெழுப்பும் நோக்கிலும், திறமைகளை வெளிக்கொணரும் நோக்கிலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடையே சிநேகபூர்வ கிறிக்கட் சுற்றுத்தொடர் இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி (தே.பா) குளக்கரை மைதானத்தில் பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோரின் நேரடி ஒருங்கிணைப்பின் கீழ் இடம்பெற்றது.
DS - Riders, DS - Legends, DS - Warriors என்றடிப்படையில் அணிகள் பிரிக்கப்பட்டு சுற்றுத் தொடரில் மோதிக் கொண்டனர். இச் சுற்றுத் தொடரின், மூன்று அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற பலப்பரீட்சையில் இறுதிப் போட்டிக்கு DS-Riders மற்றும் DS-Warriors ஆகிய அணிகள் தெரிவாகியிருந்தன. இவ்விரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் DS- Warriors அணியினர் வெற்றி வாகைசூடி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
இந் நிகழ்வின் பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களும், விஷேட அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், மற்றும் நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமீல் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக இறக்காமம் ஆயுர்வேத வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம். நக்பர், அக்கரைப்பற்று பிரதேச செயலக சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.எம். ஆஹிர் மற்றும் தொழிலதிபர் எஸ்.எம். சபீக்கான் ஆகியோரும் கலந்து கொண்டர்.
0 comments :
Post a Comment