கிடைக்கும் பணத்தை ஆக்கப்பூர்வமாக சரியான முறையில் முறையாக பயன்படுத்த வேண்டும் இதன் முக்கியத்துவத்துவம் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பார்க்கும் போது தெளிவாகிறது
எனவே இம்முறை பழைய விளையாட்டுகளை அரசாங்கத்தினால் விளையாட முடியாது இக்கடன் அரசாங்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்றாலும் இலங்கை மக்களுக்காகவே கிடைத்துள்ளது
IMF இன் நிதியுதவி மகிழ்ச்சியான விடயம் அல்லது கொண்டாட்டத்துக்கான விடயம் என ஆட்சியாளர்கள் நினைப்பார்களாயின்,
தொடர்ந்து காணப்படுகின்ற நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்பு மிக்க ஆட்சியை காண்பியுங்கள்
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும், விரிவாக்கப்பட்ட நிதி வசதியூடான நிதியை, ரூபாவாக மாற்றி, உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பமாக சர்வதேச நாணய நிதிய உதவியைக் கருதலாம் எவ்வாறிருப்பினும், நீண்டகால பொருளாதார நிலைத்தன்மையைப் அடைவதற்கு, அனைத்து தரப்பினர்களும், அர்ப்பணிப்புடன் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.
0 comments :
Post a Comment