10 மில்லியன் பெறுமதியான பாடசாலை தளபாடங்கள் வழங்கி வைப்பு



பாறுக் ஷிஹான்-
ல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அஸ் ஸூஹரா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர் மஜீதிய்யாவின் வேண்டுகோளுக்கிணங்க தரம் 4 ,5 மாணவர்களின் பாவனைக்காக 10 மில்லியன் பெறுமதியான ஒரு தொகுதி பாடசாலை தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை(8) மாலை குறித்த நிகழ்வு நடைபெற்றதுடன் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ்.சஹுதுல் நஜீமிடம் உத்தியோகபூர்வமான இப்பாடசாலை தளபாடங்கள் கையளிக்கப்பட்ட பின்னர் அதிபர் உட்பட பாடசாலை சமூகத்திடம் தளபாடங்களை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் கல்வி செயற்படுகளைச் சிறந்த முறையில் மேற்கொள்ளவேண்டுமாக இருந்தால் அடிப்படை வசதிகளான தளபாடங்கள் வகுப்பறைகள் என்பன நன்றாக அமைந்திருத்தல் வேண்டும் என்ற தொனிப்பொருளில் குறித்த பாடசாலை தளபாடங்களை பாடசாலையின் தரம் 01 க்கான பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் எம்.ரி.எம்.அனப் உட்பட ஏனைய உறுப்பினர்கள் இணைந்து வலயக்கல்வி பணிப்பாளரிடம் கையளித்திருந்தனர்.

மேலும் அஸ் ஸூஹரா வித்தியாலயத்தின் அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் பெற்றோருடன் இணைந்து பாடசாலைக்கு தேவையான வளப்பற்றாக்குறை உள்ளிட்ட பல விடயங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இறுதியாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :