இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் ( Chess Federation of Srilanka) ஏற்பாட்டில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கான (ஆண், பெண்) தேசிய இளைஞர் சதுரங்க சம்பியன்ஷிப் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களான எம்.எச்.எம்.ருஸைக், என்.ஷராப் அஹமட் ஆகிய மாணவர்கள் பங்கு பற்றி முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றிருந்தார்கள்.
இம் மாணவர்கள் இம் மாதம் 6ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரை பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் சதுரங்க சம்பியன்ஷிப்-2023 தேசிய மட்ட இறுதிப் போட்டியில் பங்குபற்றவுள்ளார்கள். இம் மாணவர்கள் இறுதிப் போட்டியிலும் சிறப்பாக போட்டியிட்டு வெற்றியடைய பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு ஆகியோர் வாழ்த்துவதோடு, இம் மாணவர்களைப் பயிற்றுவித்த பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.இர்ஷாத் அவர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்
0 comments :
Post a Comment