மருதமுனை 65 மீட்டர் வீடுகளை கையளிக்க துரிதமாக செயற்பட்ட அரசாங்க அதிபர் மற்றும் கல்முனை பிரதேச செயலாளருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கின்றேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பதில் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.
இந்த பகிர்ந்தளிப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்த சிலர் எடுக்கும் முயற்சி அருவருப்பானது என்றும் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார். வீடற்றவர்களுக்கு பகிந்தளிக்க பல வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடுகளை வழங்க துரித முயற்சி எடுக்காத சிலர் இந்த விடயத்தில் பெயர் போட்டுக்கொள்ள முயற்சிப்பதை மருதமுனை மக்கள் கூட ஏற்றுக்கொள்ள தயாரில்லை.
நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் :- முன்னாள் மற்றும் இன்னாள் அரசாங்க அதிபர்கள் இந்த விடயத்தில் காட்டிய அர்ப்பணிப்பை வெளிப்படையாகவே பேசினார். அந்த உரையின் மூலம் - உண்மையாக வீடு பகிர்ந்தளிப்பில் யார் செயற்பட்டார்கள் என்பதை உணர முடிந்தது. உண்மையில் அரசாங்க அதிபர் டக்ளஸ் மற்றும் கல்முனை பிரதேச செயலாளர் லியாக்கத் அலி ஆகியோரே பாராட்டுக்கும் நன்றிக்கும் உரித்துடையவர்கள்.
ஆக , மருதமுனை வீடுகள் கையளிப்பு போன்று - மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் நிர்மாணிக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்படாத வீடுகளையும் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment