தமிழ் நெஞ்சம் அனுசரணையில் கவிதையினி திருமதி சித்தி சபீனா வைத்துள்ளாவின் வண்ணக் கனவுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் கிண்ணியா பொது நூலகத்தில் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.சி.எம்.முனவ்வரா நளீம் தலைமையில் நடை பெற்றது.
இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.மும்மது கனி பிரதம அதிதியாகவும்,கிழக்கு மாகாண கல்வியமைச்சின் திட்டமிடல் பணிபப்பார் ஏ.ஸீ.எம்.முஸ்இல்,கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசுகர்கான் ஆகியோர் கௌரவ அதிதிககளாகவும்,கிணணியா வலயக் கல்வி அலுவகத்தைச் சேர்ந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.சி.எம்.நஸார்,எம்.எப்.நப்ரி ஆகியோர் விசேட அதிதிகளாககவும் கலந்து கொண்டு நூலின் பிரதிகளை வழங்கி வைத்தனர்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.மும்மது கனி, குறிஞ்சாக்கேணி வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜித் அவர்களுக்கு நூலின் பிரதியினை வழங்கி வைத்தார்.
நூலின் மற்றுமொரு பிரதியினை மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.சி.எம்.முனவ்வரா நளீமுக்கு நூலாசிரியர் திருமதி சித்தி சபீனா வைத்துள்ளளா வழங்கி வைத்தார்.
இந் நிழ்வில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.அன்பழகன்,ஜே.எம்.ஹில்மி,கவிஞர்கள்,ஆசிரியர்கள்,அதிபர்கள்,கல்வியதிகாரிகள்,வைத்தியர்கள்உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு நூலின் பிரதிகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத் தக்கது.
0 comments :
Post a Comment