திருகோணமலை சக்ஸஸ் முன்பள்ளி சிறார்களுக்கு , தம்பலகாமம் முஸ்லிம் வாலிபர் சங்கத்தினால் தலா இரு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு தலைமை ஆசிரியை சாஷியா முபாரக் மற்றும் ததேசினி நிசாந்த் ,ஹுஸ்னா ஹானி அஜிமுஷான் அவர்களின் ஏற்பாட்டுடன் நேற்று(31)தி/ஸாஹிரா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் தலைவர் சித்திக் மௌலவி, மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம். முக்தார் ,ஸாஹிரா கல்லூரியின் அதிபர் முகைஸ் மற்றும் பிரதி அதிபர் திருமதி மர்ழியா ஷக்காப்,இளைஞர் சேவை அலுவலகர் அலாவுதீன் பாபு , திருகோணமலை நகர முஸ்லிம் வாலிபர் சங்க செயலாளர் ஜெயினுலாப்தீன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment