கல்முனை கல்வி வலய கமு/கமு இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் கத்தார் வாழ் பழைய மாணவர் மற்றும் நலன் விரும்பிகளுக்கான அமையத்தின் இப்தார் நிகழ்வும், பொதுக் கூட்டமும் கத்தார் முன்தஸா பூங்கா வெளியில் மௌலவி ஏ.பீ.எம்.றிணோஸ் (ஹாமி) அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடல் கடந்து வாழும் பழைய மாணவர் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டதுடன் நிருவாகப் பொறுப்புகளும் அதன் வகிபாகங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. அதன் பின்னர் எம்.டீ.எம். இஜாஸ் அவர்களினால் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் பழைய மாணவர் மற்றும் நலன் விரும்பிகளுக்கான அமையத்தின் நோக்கம் பற்றி விவரிக்கப்பட்டது. அதன் பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அதில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் பழைய மாணவர் மற்றும் நலன் விரும்பிகளுக்கான அமையத்தின் தற்காலிக நிருவாகமொன்றை தெரிவுசெய்ய வேண்டும் என எச்.எம்.பஸ்மீர் முன்மொழிந்தமையை அடுத்து மூன்று மாத காலத்திற்கான தற்காலிக நிருவாகத் தெரிவு இடம்பெற்றது.
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜீ.எம்.றிஷாத் அவர்களை தலைவராகக் கொண்ட நிருவாகத்தின் உப தலைவராக எம்.டீ.எம். இஜாஸ் மற்றும் செயலாளராகவும், ஊடக பொறுப்பாளராகவும் மௌலவி ஏ.பீ.எம்.றிணோஸ் (ஹாமி) ஆகிய இருவரும் சபையோர்களினால் தெரிவுசெய்யப்பட்டனர். அத்துடன் பொருளாளராக என்.எம்.அஸ்மி, உப செயலாளராகவும், உதவி ஊடக பொறுப்பாளராகவும் எம்.டீ.எம்.இனாஸ், உப பொறுளாளராக கே.எம்.றிஸ்கான், ஒருங்கிணைப்பாளராக என்.எம்.நிஜாத் மற்றும் உறுப்பினர்களாக எம்.பஷீர், எம்.றியாழ், ஜே.எம்.றிஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், கத்தார் வாழ் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் பழைய மாணவர் மற்றும் நலன் விரும்பிகளுக்கான அமையத்தின் ஆலோசனை சபைத் தெரிவும் இடம்பெற்றது. அதனடிப்படையில் எச்.எம்.பஸ்மீர், ஏ.லுக்மான், ஏ.ஆர்.றியாத், ஜே.நிஜாமுதீன், எப்.எம்.ஹஸ்மி, எஸ்.எல்.றியாஸ், யூ.எல். நியாஸ்கான் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். இறுதியாக நன்றியுரையை அமையத்தின் உப தலைவர் எம்.டி.எம்.இஜாஸ் நிகழ்த்தினார்.
0 comments :
Post a Comment