பெண் கொலை - நகைகளை களவாடும் நோக்கில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகம்



க.கிஷாந்தன்-
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்றீம் தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து வெட்டுக் காயங்களுடன் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் இன்று (21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அக்கரப்பத்தனை, சின்ன நாகவத்தை தோட்டத்தை சேர்ந்த வெங்கடாசலம் சத்தியபாமா (வயது 68) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர், சின்ன நாகவத்தை தோட்டத்திலிருந்து கடந்த 16 ஆம் திகதி, லிந்துலை ஹோல்றீம் தோட்டத்தில் உள்ள தனது மருமகனின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல்போயுள்ளன. எனவே, நகைகளை பறிக்கும் நோக்கில் அவரை எவராவது கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மகள், மருமகன் மற்றும் இரு பேரக்குழந்தைகள் வசிக்கும் மேற்படி வீட்டில் சம்பவம் இடம்பெற்றவேளை, எவரும் வீட்டில் இருக்கவில்லை எனவும், தாயின் காது, கழுத்து மற்றும் மார்பு பகுதியில் பாரிய வெட்டு காயங்கள் காணப்பட்டன என்றும் தெரியவந்துள்ளது.

ஹோல்றீம் தோட்ட பாடசாலையில் கல்வி கற்கும் மேற்படி வீட்டைச் சேர்ந்த சிறுமி, இன்று (21) காலை தண்ணீர் பருக வீட்டுக்கு வந்திருந்த வேளையில் வீட்டில் இரத்த வெள்ளத்துடன் தனது பாட்டி கிடந்ததை அவதானித்து கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அயலவர்கள், லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

நீதவானின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.
சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசேட குழுவொன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :