சாய்ந்தமருது ஆயுர்வேத வைத்தியசாலையின் காணி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் நடவடிக்கை !



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் காணப்படுகின்ற ஆயுர்வேத வைத்தியசாலைகளின் பங்களிப்பினை உச்ச அளவில் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் பயன்படுத்தி வருகின்றார். ஆயுர்வேத வைத்தியசாலைகளின் பணிகள் மற்றும் மருந்து விநியோகத்தில் முன்னரை விட ஒரு புதிய பரிணாமம் ஏற்பட்டு தற்போது ஆய்வுகள் உற்பத்திகள் என்று பல நடவடிக்கைகள் பணிப்பாளர் அவர்களினால் முடக்கிவிடப்பட்டிருக்கின்றது.

இதன் ஒரு அங்கமாக கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் சாய்ந்தமருது ஆயுர்வேத வைத்தியசாலைக்கு காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வைத்தியசாலையின் நம்பிக்கையை கட்டியெழுப்பி அதிகமான நோயாளிகளை கவர்ந்தெடுப்பதற்குமான முதற்கட்ட நடவடிக்கையாக திட்டமிடல் கலந்துரையாடல் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், கல்முனை பிராந்திய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம் ஏ நபீல், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம் மாஹிர், ஆயுர்வேத வைத்திய சாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகளும் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :