காரைதீவு விளையாட்டு கழகம் நிருமாணித்து அரைகுறையாக கிடக்கும் உள்ளக விளையாட்டரங்கை, கிராமிய வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேஷன் ஆகியோர் பார்வையிட்டார்கள்.
கழகத்தின் அழைப்பை ஏற்று புத்தாண்டன்று காரைதீவில் இடம் பெற்ற புத்தாண்டு விளையாட்டு விழாவிற்கு வருகை தந்த இருவரும், நிதியின்மை காரணமாக அரைகுறையில் கிடக்கும் உள்ளக விளையாட்டரங்கை பார்வையிட்டனர்.
இதன்போது கழகத் தலைவர் ரி.தவக்குமார் கழகப் போஷகர்களான சிவ.ஜெகராஜன், வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்டோர் விளையாட்டரங்கு தொடர்பான பூரண விவரங்களை வழங்கினார்கள்.
இதனை நிறைவுறுத்த முப்பது மில்லியன் ரூபாய் தேவையாகின்றது என்றும் குறிப்பிடப்பட்டது.
இதிலே ஒரு பகுதியையாவது முதலில் செய்து தர வேண்டும் என்று கழகத்தினர் கோரிக்கை விடுத்தனர். அந்த கட்டடத்தை பார்வையிட்ட அவர்கள் முதலில் கூரை அமைப்பதற்கும் அருகில் வீதி அமைப்பதற்கும் முயற்சி செய்வதாக கூறிச் சென்றார்கள்.
0 comments :
Post a Comment