ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் இறந்தவர்களுக்காக இலங்கை தமிழ் கட்சி நான்காவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி நிகழ்வின் போது இவ்வாறு கூறியிருந்தார்.
“இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றது.
இதிலே மட்டக்களப்பு மாவட்டத்தின் சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 30இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
கடந்த நான்கு வருடங்களாக நாங்களும் இறந்த உறவுகளுக்கு நீதி வேண்டும், சதி செய்து கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
ஒரு புறம் நாங்கள் அஞ்சலி செலுத்துவதாக இருந்தாலும் கூட, இது அரசியல் இலாபங்களுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு குண்டுத்தாக்குதல் என்பதை பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மையிலே அசாத் மௌலானா என்று அழைக்கப்படும் அவரது முன்னாள் பேச்சாளர் இந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னால் ராஜபக்சர்கள் இருந்ததாகவும், இந்தக் கொடூரமான செயலை செய்ததற்கு பின்னால் தற்போது இராஜாங்க அமைச்சராக இருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தனும் தொடர்பு இருப்பதாக ஐ.நாவிலே அறிக்கை கொடுத்திருக்கின்றார்.
ஆனால், இவர்கள் இன்னும் சுதந்திரமாகவே நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள்” - என்றார்.
0 comments :
Post a Comment