ஒரு ஊரில் ஒரு ரமழான் நாளில்.. (கவிதை)




ஒரு ஊரில் ஒரு ரமழான் நாளில்...
+++++++
Mohamed Nizous


சுத்தி உள்ள ஊடெல்லாம்
சுபஹுக்கு முன்னாலே
பத்துகின்ற விளக்குகளால்
பகலைப் போலாகும்


பாங்கு சத்தம் கேட்டு
பாதையிலே நடந்தால்
தீங்கு அறியா சிறுசுகளும்
திரண்டு வரும் குளிர் நடுங்க


சூரியன் உதித்து
சூடாகும் ஒன்பது வரை
ஊர் அமைதியாகும்
ஊடுகள் மூடப்படும்.


ஹதியாக் கூட்டம
ஹால் பெல்லை அமுக்க
கெதியாக எழும்புவார்
கேற் திறந்து பணம் கொடுப்பார்


சின்னதுக்கு கொடுப்பதற்காய்
சிறு சமையல் நடக்கும்
உண்பதற்க்கு ஆகுமானோர்
ஒளித்து உண்பார்


சுருக்குவார் வேலகளை
சுத்தமாக ஒளு செய்வார்
திருக்குர் ஆன் எடுத்து
தருக்கில் இருந்து ஓதுவார்


சஹருக்கு உண்டது
சமிபாடடைந்து போக
ளுஹருக்குப் பசி என்ற
மகளுக்கு கதை சொல்வார்


அஸர் வரை அடுப்படி
அசராது போராடும்
உசாராகும் அஸரு பிந்த
ஊரெங்கும் பைக் சத்தம்


கஞ்சி வாளி சுமப்போர்
கட்லட் சமுசா வாங்கப் போர்
அஞ்சி மணி தாண்ட
ஆயத்தம் இப்தாருக்கு


மக்ரிப் பாங்கு நேரம்
மனப்பாடம் அனைவருக்கும்
உயிர் நனைய நீர் குடிக்க
உள் மனம் நேரம் பார்க்கும்


இப்தார் முடித்த பின்னால்
எழும்பக் கஷ்டப் பட்டு
எப்படியோ அவதிப் பட்டு
ஏகுவார் மக்ரிப் தொழ


சலவாத்து சொல்லும் வரை
சாஞ்சி படுத்திருப்பார்
சில வாத்துக் கூட்டம்
செனல் மாத்தி டீவி பார்க்கும்


தராவீஹ் தொழுது விட்டு
தயிர் அடித்துக் குடித்து விட்டு
உறங்குவார் விரைவாக
ஓ மூணரைக்கு எழும்ப வேண்டும்


சுத்தி உள்ள ஊடெல்லாம்
சுபஹுக்கு முன்னாலே
பத்துகின்ற விளக்குகளால்
பகலைப் போலாகும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :