தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட சாய்ந்தமருது, அட்டாளைசேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு போன்ற சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரதேசங்களில் களப்பரிசோதனையும், டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இன்று (06) ஆரம்பித்த இந்த நிகழ்வானது எதிர்வரும் 10 திகதி வரை இடம்பெறவுள்ளது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இடம்பெற்ற களப்பரிசோதனை மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையில் கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சீ.எம் பசால் நேரடியாக விஜயம் செய்து ஆய்வை மேற்கொண்டார். சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே. எம். அர்சத் காரியப்பரின் பணிப்பின் பேரில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.என்.எம். பைலான் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சாய்ந்தமருது இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். ஷமீலுள் இலாஹி, டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது டெங்குகள் பரவக்கூடிய அபாயகரமாக அடையாளம் காணப்பட்ட வீடுகள், பொதுக் காரியாலயங்கள் கண்காணிக்கப்பட்டு துப்பரவு செய்ய பணிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்காக அனைத்து பணிகளையும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினர் முன்னெடுத்து வருகின்றனர். எனவே டெங்கு பரவலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக எதிர்வருகின்ற காலங்களிலும் இதே போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே வீடுகள், பொது நிறுவனங்களை துப்பரவு செய்து வருகின்ற அதிகாரிகளுக்கு சிரமங்களை ஏற்படுத்தாதவாறு நடந்து கொள்ளுமாறு பொதுமக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
0 comments :
Post a Comment