சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் சாய்ந்தமருது பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் மர நடுகை நிகழ்வு (06) இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
கலாசார மத்திய நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்சானின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின்
உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பழீல், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சமூன், நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மட், பிரதேச செயலக கலாசார பிரிவின் கலாசார உத்தியோகத்தர் எஸ்.சுரேஷ் குமார், கலாசார உத்தியோகத்தர் ஏ.எச்.சபீக்கா மற்றும் கலாசார பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எஸ்.சத்தியவதி மற்றும் கலாசார மத்திய நிலையத்தின் உத்தியோகத்தர்கள் என அனைவரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment