பெண்மையை போற்றுவோம்!



அபு அலா-
திருகோணமலை அன்பின் பாதை சமூகம் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை இணைந்து நடாத்திய “பெண்மையை போற்றுவோம்” எனும் தொனிப் பொருளில் சர்வேதச மகளிர் தின நிகழ்வும், மகுடம் வழங்கும் ஸ்ரீ ரஞ்சனியின் (கனடா) “ஒன்றே வேறே” சிறுகதை நூல் வெளியீடும் (01) திருகோணமலை குளக்கோட்டம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

திருகோணமலை பாரதி தமிழ் வித்தியாலய அதிபர் (திருமதி) சுஜந்தினி யுவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிரிஸ்டியன் நோயல் இமானுவேல் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாயளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், தம்பலகாமம் பிரதேச செயலாளர் (திருமதி) ஜெ.ஸ்ரீபதி, கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் (திருமதி) இந்திரமதி வேதநாயகம் மற்றும் சட்டத்தரணி (செல்வி) ஐஸ்வர்யா சிவகுமார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும், அன்பின் பாதை சமூகத்தின் நிறுவுனர் (திருமதி) றொஸில்டா அன்டன், எண்ணம் போல் வாழ்க்கை நிறுவனத்தின் தலைவர் கனக தீபகாந்தன், இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண சந்தைப்படுத்தல் முகாமையாளர் த.து.ரகுராம் உள்ளிட்ட வைத்தியர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் இதயதீபம் முன்பள்ளி மாணவர்களினால் வரவேற்பு நடனமும், வைத்திய அதிகாரி வைத்தியர் அமிர்தகுலசிங்கம் சஞ்சயனால் நம்மவர் இசையும் இடம்பெற்றதுடன், திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல்துறையைச் சேர்ந்த 19 மண்ணின் மாதர்களுக்கு மதிப்பளித்து அவர்களைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னத்துடன் அவர்களைப் பற்றிய நூல் ஒன்றும் அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அன்பின் பாதை சமூகத்தின் நிறுவுனர் (திருமதி) றொஸில்டா அன்டனின் சமூக சேவைகளைப் பாராட்டி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாயளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரனினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும், மகுடம் வழங்கும் ஸ்ரீ ரஞ்சனியின் (கனடா) “ஒன்றே வேறே” சிறுகதை நூல் வெளியீட்டின் முதற்பிரதியை தம்பலகாமம் பிரதேச செயலாளர் (திருமதி) ஜெ.ஸ்ரீபதி பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :