சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நிருவாக உத்தியோகத்தராகக் கடந்த 2020.05.26 ஆம் திகதி முதல் பதிற்கடமையாற்றிவரும் ஏ.சீ.எம். பழீல் கடந்த 2021.11.28 ஆம் திகதி முகாமைத்துவ சேவையின் அதிவிசேட தர பதவிக்காக இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் கடந்த 2022.08.03 ஆம் திகதி பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சை என்பவற்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் முகாமைத்துவ சேவையின் விசேட தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சேவைகள் ஆணைக்குழு
வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 1994.01.26 ஆம் ஆண்டு பொது எழுதுநர் சேவைக்காக, முதல் நியமனம் பெற்ற ஏ.சீ.ஏம். பழீல் பொத்துவில் பிரதேச செயலகத்தில் தனது முதல் நியமனத்தினை ஏற்று காரைதீவு, நிந்தவூர். சாய்ந்தமருது மற்றும் கல்முனை ஆகிய பிரதேச செயலகங்களில், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக, பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக, பதவிநிலை உதவியாளராக மிகவும் திறமையாகவும், அர்ப்பணிப்புடனும் சேவையாற்றியுள்ளார்.
அத்துடன், சுனாமியிற்கு பின்னரான நெருக்கடியான காலப்பகுதியில் பொலிவேரியன் மீள் குடியேற்ற கிராமம் அமைப்பதற்காக தனியார் காணிகளை சுவிகரிப்புச் செய்வது தொடர்பான பல்வேறு கடமைகளை மிகச் செம்மையாகச் செய்து, இப்பிரதேசத்திற்காக பெரும் சேவையாற்றியுள்ளதுடன், கொரனா பெருந்தொற்று மற்றும் கடந்த ஆண்டு எமது நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியான காலத்தில் உத்தியோகத்தர்கள் கடமைக்கு செல்வதில் பல்வேறு அசௌகரிய நிலையினை எதிர்நோக்கிய வேளைகளிலும் ஒவ்வொரு நாளும் காரியாலயத்திற்கு சென்று கடமை நேரத்திற்கு மேலதிகமாகவும் காரியாலயத்தில் தரித்திருந்து இப்பிரதேச மக்களுக்காக தனது கடமைகளை சிறப்பாக ஆற்றியுள்ளார்.
0 comments :
Post a Comment