காரைதீவில் உணவக உரிமையாளர், ஊழியர்களுக்கான மருத்துவ பரிசோதனையும், தொற்றாநோய் பரிசோதனையும் !



நூருல் ஹுதா உமர்-
ணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் தேசிய ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் தேசிய உணவுப்பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வஸீர் தலைமையில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி சேவை பிரதேசத்தில் உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் நிலைய உரிமையாளர், ஊழியர்களுக்கான மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சியும், தொற்றா நோய் பரிசோதனையும் இன்று இடம்பெற்றது.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிபள்ளி பிரதேச உணவு உற்பத்தி, விற்பனை, வினியோக நிறுவன உரிமையாளர், ஊழியர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனையும், தொற்றா நோய் பரிசோதனையும் செய்து கொண்டனர்.

இந்நிகழ்வில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் பைஸல் முஸ்தபா, பொதுச்சுகாதார பரிசோதர்களான கலந்தர்ஷா ஜெமீல், எம்.எம். முஹம்மட் சப்னூஸ், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :