கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் வீதிகளுக்கு புதிய பெயர் பலகை: எந்திரி முனாஸின் நேரடிக் கண்கானிப்பில் முன்னெடுப்பு



நூருள் ஹுதா உமர்-
ல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மருதமுனை தொடக்கம் ஒலுவில் வரையான வீதிகளுக்கு புதிய பெயர்ப் பலகை நடும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளது

கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் எந்திரி எம்.எம்.எம்.முனாஸின் நேரடிக் கண்கானிப்பில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பிரதேசத்திற்கு செல்லும் பொதுமக்கள் குறித்த ஒரு வீதியை இலகுவாக சென்றடைய அவ்வீதியின் பெயர்ப்பலகை மிகவும் அத்தியாவசியமானதாகும்.

நீண்ட காலமாக குறித்த வீதிகளுக்கு பெயர்பலகை இல்லாத குறைபாட்டை கவனத்திற்கொண்டு கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் எந்திரி முனாஸ் புதிய பெயர் பலகை நடும் வேலையினை மேற்கொண்டமை பாராட்டுக்குரியதாகும்.

இதில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பராமரிப்பு வீதிகளுக்கு எந்திரி முனாஸினால் இப்புதிய பெயர் பலகை இட்டமை மக்களின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :