குடும்பிமலை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடும்பிமலை காட்டுப் பகுதியில் வைத்தே இந்த சடலம் சனிக்கிழமை (1) மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கிரான் பாடசாலை வீதியைச் சேர்ந்த 69 வயதுடைய பசுபதி ராகவன் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் கடந்த 29 ஆம் திகதி குடும்பத்தாரிடம் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றவர் என பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment