நாளை காரைதீவில் சித்திரை புத்தாண்டு வெள்ளிவிழா விளையாட்டு விழா!



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவு விளையாட்டு கழகமும், விபுலானந்தா சனசமூக நிலையமும், கல்முனை சொர்ணம் நகைமாளிகையினரும் இணைந்து நடத்துகின்ற வெள்ளிவிழா கலாச்சார பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விழா நாளை 15 ஆம் தேதி சனிக்கிழமை காரைதீவில் நடைபெற இருக்கின்றது.

கழகத் தலைவர் த. தவக்குமார் தலைமையில் நடைபெறவிருக்கின்ற இந்த கலாச்சார விளையாட்டு விழாவில், பிரதம அதிதியாக வீதி போக்குவரத்து இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பிக்கிறார்.
சீர்பெறு அதிதியாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேஷன் கலந்து சிறப்பிகின்றார்.

கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோர் கலந்து சிறப்பிக்கிறார்கள்.

அனுசரணை அதிதிகளாக சொர்ணம் குழுமங்களின் ஸ்தாபக தலைவர் எம். விஸ்வநாதன், அஸ்கோ அமைப்பின் தலைவர் ஏ.விவேகானந்தராஜா, லண்டன் ரி. ரமேஷ், ஆஸ்திரேலியா வீ. விவேகானந்தமூர்த்தி, ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

வழமை போல் கல்விச் சாதனையாளர்களும் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.

மேலும் சிறப்பு ,நட்சத்திர ,விசேட அதிதிகளாக பல முக்கிய பிரமுகர்களும் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

காலையில் மரதன் ஓட்டமும், மாலையில் மைதான நிகழ்ச்சிகளாக தலையணைச்சமர், முட்டி உடைத்தல், தேங்காய் துருவுதல் , மிட்டாய்பை ஓட்டம், கிடுகிழைத்தல், தடைதாண்டிஓட்டம், பலூன் ஊதி உடைத்தல், சூப்பியில் பால் குடித்தல், கயிறு இழுத்தல் ,எலிஓட்டம், வினோத உடைப்போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என்று கழகச் செயலாளர் எஸ்.கிருஷாந்தன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :