திருக்கோவில் பிரதேச மயானம் கடலரிப்பின் ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது .
கடந்த சில நாட்களாக திருக்கோவில் மயான பிரதேசத்தில் கடல் அரிப்பு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
அதன் காரணமாக அங்கிருந்த கல்லறைகள் சில கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றன .
மயானப்பிரதேசமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரனிடம் கேட்டபோது.
மயானப்பகுதி வழமை போல கடல் அரிப்புக்கு உள்ளாகி வருகின்றது உண்மை . கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் அங்கு கல் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கின்றார்கள். என்றார்.
கடந்த காலங்களில் திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக பாரிய கடலரிப்பு ஏற்பட்டிருந்த வேளையிலே கல்லணை போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment