புனித அல்குர்ஆன் எமக்கு உபதேசித்துள்ளது போன்று முஸ்லிம்கள் எவ்வாறான சூழ் நிலையிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். சமகாலத்தில் நாம் சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளையும் இன்னல்களையும் எதிர்கொண்டு வருகின்றோம். இதற்கான தீர்வினை துஆக்கள் மூலம் பெற்றுக்கொள்ள இந்த புனித நாளில் விஷேட துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்.
குறிப்பாக ஒற்றுமை, நல்லிணக்கம், நிலையான சமாதானம், நாட்டின் அபிவிருத்தி போன்றவற்றுக்காகவும் முஸ்லிம்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். உள்நாட்டில் அரசியல் ரீதியான நெருக்கடி நிலைமைகள் தற்பொழுது தனித்துக் காணப்பட்டாலும், பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாகப் பலர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த புனிதமான நாளில் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் அயலவர்களை இனம் கண்டு அவர்களுக்கு முடியுமான உதவிகளைச் செய்து, அவர்களது கஷ்டங்களைப் போக்கச் சகலரும் இத்தினத்தில் முன்வர வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹூத் தஆலா நாம் நோற்ற நோன்பை அங்கீகரித்து அவனது உயரிய நற்கூலியைத் தந்தருள்வானாக, நம் நாட்டு மக்கள் முகங்கொடுக்கும் அனைத்து நெருக்கடிகளையும், சோதனைகளையும் நீக்கியருள்வானாக! ஆமீன்.
உங்கள் அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் 'ஈத் முபாரக்'!
ஏ.ஜே.எம். முஸம்மில்
ஊவா மாகாண ஆளுநர்
0 comments :
Post a Comment