மட்டக்களப்பு - ஏறாவூரில் புனித ரமழான் இப்தார் நிகழ்வு
நேற்று சுற்றாடல் அமைச்சர் நஸீர் அகமட் அவர்களின் தலைமையில்
குல்லிய்யத்து தாரில் உறூம் அரபுக்கல்லூரியில் இடம்பெற்றது.
இந் நிகழ்வை அமைச்சர் நசீர் அஹமட் ஏற்பாடு செய்திருந்தார்.
அமைச்சர் நசீர் அஹமட் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் :
பயங்கரவாத எதிர்பு சட்டம் உடனடியாக பாராளுமன்றிற்கு வரும் நிலை இல்லை, அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது,
மாற்றப்பட வேண்டும் என்ற பல கருத்துக்கள் மக்கள் மத்தியிலும், அமைப்புக்களையும் உள்வாங்கி மாற்றம் செய்யப்பட வேண்டும் , PTA யில் உள்ள மோசமான விடயம் மாற்றப்பட வேண்டும் ,
வருகின்ற சட்டம் ஏற்கனவே உள்ள சட்டம் போல அமைய முடியாது, ATA இன்று அனைவருடைய கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு, எமது நீதி அமைச்சர் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் அடங்கிய ஒரு சட்டமாக அது மீண்டும் பாராளுமன்றத்திற்கு வரலாம்.
0 comments :
Post a Comment