கல்முனை பஹ்ரியாவின் பவளவிழா உத்தியோகபூர்வமாக தொடக்கி வைப்பு.



நூருள் ஹுதா உமர், சர்ஜூன் லாபீர்-
ல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல் பஹ்ரியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) பவளவிழா நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக தொடக்கி வைக்கும் நிகழ்வும், இப்தார் வைபகமும் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் தலைமையில் இன்று (05) பாடசாலையில் நடைபெற்றது.

உத்தியோகபூர்வ பவளவிழா இலட்சினையை திறந்து வைத்த பாடசாலை சமூகம் இந்த இலட்சிணையை பவள விழா இலட்சணையாக அறிவித்துள்ளது. மேலும் இவ்வருடம் முழுவதுமாக நோன்புப்பெருநாளை அடுத்து இரத்த தான முகாம்கள், பழைய மாணவர்களின் அணிகள் பங்குகொள்ளும் கிரிக்கட் சுற்றுப்போட்டி, கலை, கலாச்சார நிகழ்வுகள், பிரமாண்ட பரிசளிப்பு, மேலங்கி அறிமுகம், சாதனையாளர் கௌரவிப்பு, பெண் பழைய மாணவிகளின் நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற உள்ளது.

இந்த நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்களான எம்.ஏ. அஸ்தர், ஏ.எஸ். சலாம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் எஸ்.எல். ஹமீட், பழைய மாணவர் அமைப்பின் செயலாளர் எம்.ஐ.எம். ஜிப்ரி, பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் அமைப்பின் பிரதிநிகள் எனபலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :