வி.ரி.சகாதேவராஜா-
இஸ்லாத்தில் நோன்பு கட்டாயமாக கடமையாக்கப்பட்டு இ
ருக்கின்றது.
இவ்வாறு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் வருடாந்த இப்தார் நோன்பு திறக்கும் வைபவத்தில் தலைமை உரையாற்றிய வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தெரிவித்தார்.
சமமாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் நேற்று (11) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி திணைக்கள பிரதம கணக்காளர் ஏ.எம்.றபீக் முன்னாள் தவிசாளர் எ.
எம்.மாஹிர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கபீர் முன்னாள் உதவி தவிசாளர் அச்சி மொகமட் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..
இஸ்லாத்தில் புனித ரமழான் மாதத்தில் நோன்பிருந்து அல்லாஹ்வை அருள் பெற கடமையாக்கப்பட்டுள்ளது. இங்கே ஏனைய சகோதரர்களும் நோன்பின் மகத்துவத்தை பரிமாறிக் கொள்வதில் அன்பு விளைகிறது. நல்லிணக்கம் புரிந்துணர்வு மேலும் வலுப்பெறுகிறது. அனைத்து சமயங்களும் நோன்பை நோற்கின்றனர் .அது உடலுக்கு மாத்திரம் அல்ல உளத்துக்கும் உற்சாகமூட்டக்கூடியது. இறை சிந்தனை ஏற்படுத்தக்கூடியது. புனித அல்குர்ஆன் அருளப்பட்ட புனித ரமழான் மாதத்திலே நோன்பு நோற்கின்ற அனைவரும் பாக்கியசாலிகள். இதற்காக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்.
0 comments :
Post a Comment