முத்தமிழ் அறிஞர் விபுலானந்தர் பிறந்த மண்ணில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு



நூருல் ஹுதா உமர்-

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீர் தலைமையில் காரியாலய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ரமழான் சிந்தனையை மௌலவி ஏ.எச்.எம். றியாஸத் நிகழ்த்தினார்.

தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒன்றித்து வாழும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணில் இன நல்லிணக்க நிகழ்வாக இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.எம். வாஜித் கலந்து கொண்டு சமூக நல்லிணக்கம், நோன்பின் மாண்புகள், நோன்பும்- சுகாதார நிலையும் பற்றி விளக்கமான உரை ஒன்றை நிகழ்த்தினார். மேலும் அதிதிகளாக மாளிகைக்காடு ஸாலிஹீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ. ஜெமீல் ஹாஜியார், காரைதீவு பிரதேச சபை செயலாளர், காரைதீவு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வின் முடிவுரையை பொதுச்சுகாதார பரிசோதகர் கலந்தர்ஷா ஜெமீல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :