”தரத்தை நோக்கிய வீருநடை” என்ற தொனிப்பொருளினாலான விசேட கடமைச்சபத நிகழ்வு



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கடமை சபத நிகழ்வும் இவ்வருடம் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்ற ”தரத்தை நோக்கிய வீருநடை” என்ற தொனிப்பொருளினாலான விசேட நிகழ்வும் திங்கட்கிழமை (17) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கடமை சபதத்தை பிராந்திய மேற்பார்வை மருந்தாளர் திருமதி இந்திர குமார் அவர்கள் வாசித்ததுடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் ஊக்கிவிப்பு உரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றிய மீளாய்வும் செய்யப்பட்டது. இதன்போது பணிப்பாளர் அவர்கள் பணிமனையினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற செயற்றிட்டங்கள் கருத்திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவதோடு அதனை விரைவுபடுத்துமாறும் பிரிவு தலைவர்களையும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களையும் வேண்டிக் கொண்டதுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவையினால் சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்கள் கருத்திட்டங்களை மேலும் செயற்றிறன்மிக்கதாக்கி அதனை அரச, தனியாரின் பங்களிப்புடன் வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :