பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரியின் கோரிக்கைக்கு அமைவாகவும், தாய் சேய் நலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியின் சிபாரிசிக்கு அமைவாகவும், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் தாய் சேய் நலப்பிரிவினை மேம்படுத்தும் பொருட்டு இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் அவர்களின் தலைமையில் ஸ்மார்ட் தொலைக்காட்சி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ.ஏ வாஜித், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சி. மாஹீர், தாய் சேய் நலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எச் ரிஸ்பின், உயிரியல் மருத்துவ பொறியியலாளர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment