தமிழ், முஸ்லிம் இன நல்லுறவை கட்டியெழுப்பும் கலை கலாசார நிகழ்வு



பாறுக் ஷிஹான்-
ரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்ஸில் நிதிப்பங்களிப்புடன் முஸ்லிம் எய்ட் நடைமுறைப்படுத்தும் SEDR Active Citizens எனும் செயற்திட்டத்தின் கீழ் சம்மாந்துறையில் செயற்படுத்தப்படும் towards a change (ஒரு மாற்றத்தை நோக்கி) குழுவின் ஏற்பாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் சம்மாந்துறை கோரக்கர் வித்தியாலய மைதானத்தில் கலை கலாசார நிகழ்வுகளும், சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவும் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா, சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் இளங்கோவன், பள்ளிவாசல் நிர்வாக சபையினர், விளையாட்டு உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் போன்றவர்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதற்காக towards a change (ஒரு மாற்றத்தை நோக்கி) குழுவினர் ஒழுங்கு செய்திருந்த காட்சிப் பலகையில் இந்நிகழ்விற்கு வருகை தந்ந பிரதம விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்தனர்.






















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :