கல்முனை கல்வி வலய மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி அதிபராக கடமையாற்றி கடந்த வெள்ளிக்கிழமை (07) ஓய்வு பெற்றுச்சென்ற எம்.ஜே.ஏ.ஹஸீப் அவர்களை வீடு தேடி சென்று பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், இப்தார் வைபகமும் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்ட கல்விப்பணிப்பாளருமான ஏ.பி.பாத்திமா நஸ்மியா சனூஸ் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை கோட்ட கல்விப்பணிப்பாளரின் தலைமையில் நடைபெற்ற கோட்ட அதிபர்கள் ஒன்றுகூடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான 2023 ம் ஆண்டிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்கின்ற அதிபர்களை கௌரவித்தலின் முதல் கட்டமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் பிரதம அதிதியாகவும், நிர்வாக பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர், கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். மேலும் கல்முனை கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment