அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் நேற்று (20) உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பதில் வைத்திய அத்தியட்சகராக டொக்டர். எம்.எச்.எம். சனூபர் கடந்த 03 மாதங்களாக கடமையாற்றிய நிலையிலேயே சுகாதார அமைச்சினால் இந் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இன் நிகழ்வில் வைத்திய நிபுணர்கள்,வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை குழு உறுப்பினர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், வைத்திய அதிகாரிகள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், அலுவலக உத்தியோகத்தர்கள் உட்பட கலந்து கொண்டனர்.
இவர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளராகவும், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment