அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ டக்ளஸ் தலைமையில் மாவட்ட செயலக முன்றலில் (18) நடைபெற்றது. சமூக நல்லிணக்க இப்தாராக இடம்பெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி மௌலவி முனீர் முனவர் (நளிமி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், மண்டல மகா விகாராதிபதி சுஹதகம சீலரத்ன ஹிமிஹிரத, உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி அனீஸ், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.எல் ஆதம்பாவா, மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயளாலர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் பொலிஸ் மற்றும் இரானுவ உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி அனீஸ், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் ஆகியோரின் தலைமையிலான குழுவினரின் நெறிப்படுத்தலிலும் ஒழுங்குபடுத்தலிலும் சிறப்பாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment