கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா பாடசாலை அதிபர் யு.எல். நாசர் தலைமையில் மிகச் சிறப்பாக இன்று 25 நடைபெற்றது. நிகழ்வுக்கு கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளர் எச்.எம்.எம். றசீட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அகரம் பழக்கினார்.
நிகழ்வின் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மாலிக் அவர்களும், விசேட அதிதியாக உதவிக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா மாலிக் அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் பாடசாலையின் பிரதி உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பகுதித் தலைவர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment