கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் காணி உறுதிப்பத்திரங்களைப்பெற துரித நடவடிக்கை



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய ஆயுர்வேதப்பிரிவின் முயற்சியின் காரணமாக பாண்டிருப்பு மற்றும் பெரிய நீலாவனை மத்திய ஆயுர்வேத மருந்துகங்களுக்குரிய காணி உறுதிப்பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன.

குறித்த காணி உறுதிப்பத்திரங்களை பெறுவதற்கு கல்முனை பிரதேச செயலகம் துரிதமாக செயற்பட்டமைக்காகவும் தொடர்ந்தேர்ச்சியான முயற்சிகளை மெற்கொண்டமைக்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களுக்கும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.ஸ்ரீதர் விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.

இக்காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிறீதர், பணிமனை சார்பில் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ வாஜித், கல்முனைப்பிராந்திய ஆயுர்வேதப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ.நபீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :