சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலயத்தில் இப்தார் நிகழ்வு!



சாய்ந்தமருது கமு/கமு மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு பழைய மாணவர் சங்கத்தின் தலைவி அதிபர் திருமதி றிப்கா அன்சார் தலைமையில் 2023.0415 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபை தலைவர் அஷ்செய்க் ஏ.எல்.எம். சலீம் (சர்க்கி) அவர்கள் ரமழான் சிந்தனையை வழங்கினார்.

நிகழ்வில் முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதி ஏ.எல்.எம்.மைமூனா அவர்களும் அரசியல் பிரமுகர்களான முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனையின் முன்னாள் முதல்வர் சிறாஸ் மீராசாகிப், முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்டவர்களுடன் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசலின் தலைவர், பொறியலாளர் சாகீர், சகாதேவராஜா மற்றும் சகறூன் உள்ளிட்ட கல்வியாளர்களும் பாடசாலைகளின் அதிபர்கள் முன்னாள் அதிபர்கள் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் நண்பர்கள் பாடசாலையின் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு பாடசாலையில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த அதிபர் இழுபறி தொடர்பான விளக்கங்களை அதிபர் திருமதி றிப்கா அன்சார் அவர்கள் விரிவாக விளக்கியமை குறிப்பிடத்தக்கது.


























































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :